சாமுவேல் பறையர்-Samuvel Paraiyar


 

பறையர்களின் அடையாளம்-அய்யா.சி.சாமுவேல் பறையர்

____________________________________________________________
————————————————————————————-

தென்தமிழகத்தில் புரையோடிக்கிடந்த சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடி எதிர்ப்பு அரசியல் செய்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் பெரும்பாலோர் சாதி இந்துக்களின் சமரச அரசியலில் கலந்துவிட்டனர். தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பறையர்களின் உரிமைகளுக்காகப் போராடி பிராமணியத்துடனும் திராவிடத்துடனும் எவ்வித அரசியல் மற்றும் கருத்தியல் சமரசம் செய்யாத தலைவர் என்றால் அய்யா சி. சாமுவேல் பறையரைத் தவிர்த்து வேறு யாரையும் கூறமுடியாது. சாதி இழிவால் ஒடுக்கப்பட்டு பறையரினத்தின் விடுதலை மீட்பிற்க்காகவும் மானித நேயத்தினை வளர்த்தெடுக்க வாழ்நாள் முழுவதும் தொடர் புரட்சியை செய்த, அய்யா அவர்கள் உடல் நலக் குறைவால் 10.06.2014 அன்று வீரமரணம் அடைந்துவிட்டார். அய்யா அவர்கள் பயணித்து வந்த பறையர் வரலாற்று மீட்புக் களத்தில் கண்ட அனுபவங்களையும், அய்யாவின் பறையர் விடுதலைக்கான போராட்ட அணுகுமுறையையும் பறையராகப் பிறந்த நாம் அனைவரும் அறிய வேண்டும்.
இளமைப் பருவம்
இளமைப் பருவங்களில் இளைஞர்கள் காதல், விளையாட்டு, பொழுதுபோக்கு என்று சிந்திப்பது தான் இன்றைய சமூக எதார்த்தம். இது சாதாரன மனிதனின் சிந்தனையோட்டம். ஆனால் சாதாரன மனிதனாக சிந்திக்காமல் அய்யா.சி .சாமுவேல் பறையர் அவர்கள் தனது பள்ளிப் பருவம் முதற்கொண்டே சமூகம் சார்ந்த சிந்தனைகளை யோசிக்கத் தொடங்கியிருக்கிறார். இவரின் ஆளுமை சிறுவயதிலிருந்தே வெளிப்பட்டிருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் ‘இளையராஜா நற்பணி மன்றம்’ என்ற ஒரு இளைஞர் குழுவை ஒருங்கிணைத்தார். இதில் இடம் பெற்றவர்கள் அனைவரும் பறையரின மக்கள். இதனைக் ‘கல்கோட்டை நண்பர்கள்’ எனவும் அழைப்பார்கள். இந்த நற்பணி மன்றம் சார்பாக முதலில் திரைப்படப் பாடல்களை சமூகம் சார்ந்த கருத்துக்களோடு மெட்டமைப்பதுதான். நாளடைவில் இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுக் கருத்துக்களை பரப்புவது என்றளவில் விரிவடைந்தது. இளையராஜா நற்பணிமன்றம் 1983-இல் பட்டியலின இளைஞர் இயக்கமாக (DYM) பரிணமித்தது. இளையராஜா நற்பணி மன்றம் மூலமாக எடுத்துக்கொண்ட கலைப் பயிற்சியானது பட்டியலின இளைஞர் இயக்கத்தினை பல்வேறு கிராமங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. தலித் இளைஞர் இயக்கம் சார்பாக கல்வியே பறையர்களின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்ற கருத்தினை மையப்படுத்தி பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வு கலைப் பிரச்சாரத்தினை முன்னெடுத்தார். இதன் வளர்ச்சி அடுத்தகட்டமாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் அனைத்துக் கிராமங்களிலும் தலித் இளைஞர் இயக்கம் சார்பில் மாலை நேரக் கல்வி மையத்தினை உருவாக்கி ஜனநாயகத்திற்கான சமூக விழிப்புணர்வுக் கல்வியை பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து இலவச சேவை செய்தனர். கல்விப் பணிகளை மையப்படுத்தி சேவைகள் செய்ததால் இந்த இயக்கத்திற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்தது. கிராமங்களில் கல்விப்பணியோடு சமூகம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளையும் நாளடைவில் கையிலெடுக்க ஆரம்பித்தது. மேலும் இதன் மூலம் ஆண்டு தோறும் பறையரினத் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கொண்டாட்டங்களை அறிமுகப்படுத்தி சமூகத் தலைவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த முறையில்தான் அறிவர் அம்பேத்கர் அவர்களின் புகழ் தென்தமிழகம் முழுவதும் பரவியது.
தெந்தமிழகத்தில் அறிவர் அம்பேத்கர் அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த பெருமையும் புகழும் அய்யா சி. சாமுவேல் பறையர் அவர்களுக்கு முதலிடம் உண்டு. தலித் இளைஞர் இயக்கம் சார்பாக மாநில அளவிலான விழிப்புணர்வு கலை விழாக்களையும் கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் முன்னெடுக்குமளவிற்கு இயக்கம் பரிணமித்து விரிவடைந்தது. இது 1990 வரையிலும் மிகவும் சிறப்பாக இயங்கி வந்தது. தலித் இளைஞர் இயக்கத்தில் பறையர், பள்ளர், அருந்ததியர்கள் என அனைத்து சமுதாய மக்களும் செயல்பட்டு வந்தனர். இயக்கம் வளர வளர அய்யாவின் அறிவுத் தேடல் மிகவும் அதிகமாயிற்று. இதன் தொடர்ச்சியாக பறையர்கள் குறித்த ஆழ்ந்த ஆய்வுக்கு செல்லும் போது பறையர்களுக்கு நீண்ட நெடிய வரலாறுகள் மறைக்கப் பட்டுள்ளதினை அறிந்து கொள்கிறார்.
இத்தகைய மேன்மை பொருந்திய வரலாற்றினை ஏன் நமது அரசியல் இயக்கங்களும் சமூக இயக்கங்களும் முன்னெடுக்கவில்லை என்ற அறிவுத் தேடலோடு இதனை எப்படியாவதும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும் என்றும், அதற்கான பொறுப்புணர்வும் கடமையுணர்வும் நமக்கு இருக்கிறது என்றும் தீர யோசித்து மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1891-இல் தொடங்கிய பறையர் மகா ஜன சங்கத்தினை புதுப்பித்து இந்த இயக்கத்திற்கு நூற்றாண்டு விழாவினையும் முன்னெடுத்து, சங்கத்தினை ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ என்று பெயர் மாற்றம் செய்து 1991-இல் மாவீரனின் நினைவாக ஆரம்பித்தார். 1991-இல் ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ அமைப்பை ஆரம்பிக்கும்போது ஏன் தமிழ்நாடு பறையர் பேரவை உருவாகிறது இதற்கான தேவை என்ன நியாயத்தினையும் விளக்கத்தினையும் 1991-ஆம் ஆண்டு வெளியான துண்டறிக்கையின் வாயிலாக அறிய முடிகிறது.
தமிழ்நாடு பறையர் பேரவை ஏன்?
பட்டியலின ஒற்றுமை, தலித் ஒற்றுமை (சக்கிலியர், பறையர், பள்ளர் ஒற்றுமை) என்பது சில நெருக்கடிகளின், தேவைகளின் அடிப்படையில் மேடையில் பேசுவதற்கும் காகிதத்தில் எழுதுவதற்கும் மட்டுமே தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் கட்சி/இயக்க தலைமையில் இருக்கும் அனைத்து தலித் இயக்கவாதிகளின் செயல்பாடுகளும் தத்தமது சாதிய வன்மத்துடனே செயல்படுவதனை நம்மால் உணரமுடிகிறது. குறிப்பாக பறையராக இருந்தால், பள்ளர்களையும், அருந்ததியர்களையும் எவ்வாறு மேலே வரவிடாமல் தடுப்பது, பள்ளர்களாக இருந்தால் பறையர்களையும், அருந்ததியர்களையும் எவ்வாறு மேலே வரவிடாமல் தடுப்பது, என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்வது. ஒரு சில தலைவர்களால் ஒட்டுமொத்த தலித் அரசியலையும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று நியாயம் சொல்லுவார்கள் இந்த அறிவு ஜீவிகள். ஆனால் உண்மையில் பெருமளவிளான தலித் அரசியல்வாதிகள் சாதிய மனப்பான்மையோடு தான் செயல்படுகிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், பண்பாட்டு ரீதியாக(திருமன உறவு) பட்டியல் சாதிகளுக்குள் ஒரு இனக்கத்தினை ஏற்படுத்துவதற்க்கு தலைவர்கள் முன்வரவில்லை. எனவே, உணர்வுப்பூர்வமாக உருவாகாத ஒற்றுமை என்பது சமூகத்தினை கூறுபோட்டு விடும்.
நாம் வாழும் சமூகம், சாதிகளால் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சாதியின் தாக்கத்திற்கு நாம் உள்ளாகியே வேண்டியதிருக்கிறது. எனவே “சாதிவாரியாக அமைந்துவிட்ட இச்சமூக அமைப்பில் சாதிவாரியான அமைப்பாவதும், பொதுவான தேவைகளுக்கு தோழமைகளோடு களத்தில் நிற்பது” என்பதுமே இந்த மண்ணுக்கேற்ற மனவியல் மருத்துவம் என்று உணர்கிறோம்.
‘நாம்’ நமது வீட்டைக் கட்டுவோம்….!
‘அவர்கள்’ அவர்களின் வீட்டைக் கட்டட்டும்….!
பொதுவான செயல்களுக்கு ஒன்று கூடுவோம்.
எனவே இந்த அடிப்படையில் நாங்கள் பறையர்களாக இருப்பதாலும் தமிழகத்தில் வாழும் பட்டியலினத்தில் பறையர்களே பெரும்பான்மையாக இருப்பதாலும் இவர்களை அமைப்பாக்கிட ‘தமிழ்நாடு பறையர் பேரவை’ என்ற அமைப்பை தற்காலிகமாக அமைத்து வருகிறோம்.
சாதியின் பெயரால் இப்படி அமைப்பாவதும் வெளிப்படையாக வெளியில் வருவதும்
சாதியால் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும்
காலத்தின் கட்டாயமாய் இருக்கிறது….!
காலத்தின் தேவையாய் இருக்கிறது….!
காலத்தின் நெருக்கடியாக இருக்கிறது….!
எனவே,
மறைந்து மறைந்து வாழ்ந்தது போதும்!
சாதியை மறைத்து மறைத்து மடிந்தது போதும்….!
வெட்கி வெட்கி தலை குனிந்தது போதும்…!
வேதனைப்பட்டுப்பட்டு வீழ்ந்தது போதும்…!
கள்ளரைப் போல், மறவரைப் போல் மீசையை முறுக்கி
பறையர் என்போம், ‘ஆம்’ பறையர்தான் என்போம்.
பறையர்தான் என்று முழங்குவதால்
ஆழ்மனதில் புதைந்து கிடக்கும்
தாழ்வு எண்ணத்தை தகர்த்தெறிவோம்….!
‘அரிசன்’ என்பது அன்றையப் பொய்யடா
‘தலித்’ என்பது இன்றையப் பொய்யடா
‘பறையர்’ என்பது எனக்கு மட்டும் உள்ள தனிப்பெயர்.
‘தலித்’ என்பது எங்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் உள்ள பொதுப்பெயர்.
‘பறையர்’ என்பது நான் உடுத்தியிருக்கும் வேட்டியைப்போல!
‘தலித்’ என்பது நான் போர்த்தியிருக்கும் துண்டைப்போல !
துண்டு எனக்குத் தேவைதான்
துண்டைவிட உடுத்தியிருக்கும் வேட்டியே எனக்கு முதல் தேவை.
எனவே
பறையர் என்று சொல்லடா….பாரில் நிமிர்ந்து நில்லடா…!
உனக்கு நிகர் எவரடா….உலகிற்கு இதைச் சொல்லடா..
என்ற பறை முழக்கத்தை உயிர் மூச்சாய் கொண்டு
பறையர், பறையர் என்று பறை முரசடித்து…
சாதி இழிவின் பகை முடிப்போம்.
எந்த சாதியைச் சொல்லி அடக்கப்பட்டோமோ
அந்தச் சாதியைச் சொல்லியே ஆர்த்தெழுவோம்..!
எந்தச் சாதியைச் சொன்னாலே தாழ்வாய் கருதி தலைகுனிந்தோமோ
அந்தச் சாதியை ஆயிரம் முறை அழுத்தம் திருத்தமாய் கூறி
தாழ்வு எண்ணத்தைத் தகர்த்து எறிவோம்
எந்த (சாதி) கல் நம்மை முடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் நம்மீது எறியப்பட்டதோ
அந்த (சாதி) கல்லையே நாம் நிமிர்வதற்கும், நிற்பதற்கும்
தாங்கியாகவும், தளமாகவும் ஆக்கிக்கொள்வோம்…!
எனவே
புளுங்கியது போதும், எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்க
புலி என செயல் செய்ய புறப்படுவோம் வெளியில்….!
அம்பேத்கர் ஒரு அறிவுச் சூரியன்….!
அந்த அறிவுச் சூரியனை அடையாளம் காட்டிட ஒளிவிளக்குகள் தேவையில்லை அம்பேத்கரைத் தூக்கிப் பிடித்திட ஆயிரம் இயக்கங்கள் இருக்கின்றன.
ஆனால்…! தமிழக மண்ணில் பறையனாய் தோன்றி பறையனாய் வாழ்ந்து இன எழுச்சிக்கு வித்திட்ட அம்பேத்கருக்கு வழிகாட்டியாக விளங்கிட்ட பறையர்களின் மாவீரன் இன்றல்ல நேற்றல்ல 100 ஆண்டுகளுக்கு முன்பே ‘பறையன்’ என்றாலே இழிவின் எல்லையாய் கருதப்பட்ட காலகட்டத்தில் ‘பறையர் மகாஜன சபையை’ 1891-இல் நிறுவிய சமூகப் போராளி. ‘பறையன்’ என்ற வார இதழை 1893-இல் தொடங்கி ஏழு ஆண்டுகள் நடத்தி பெருமை பெற்றவர். வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு மாமன்னரிடம் தன்னை ‘பறையன்’ என்று அறிமுகம் செய்துகொண்ட மானமிக்க மனிதர். பொதுப்பாதைகளில் நடக்கவும், பொதுக்குளங்களில் நீர் எடுக்கவும் 1925-இல் முதல் உரிமையை வாங்கிக் கொடுத்த முதல் மாமனிதர். இத்தனையும் செய்துவிட்ட இனமான எங்கள் அய்யா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களை எத்தனை பேருக்குத் தெரியும்?. பறையர் இனத்தில் தோன்றிய தமிழ் வித்தகர், ‘தமிழன்’ என்ற இதழை 1907-இல் நடத்தி பெருமை பெற்ற அயோத்திதாசப் பண்டிதரை யார் அறிவார்? பறையர் இனத்தில் தோன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் இன எழுச்சிக்கு வித்திட்ட தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள், ஆரிய சம்காரன், எம்.சி. ராசா, அரசியலில் நேர்மையும் பொதுவாழ்வில் தூய்மையும் கொண்ட ஆனால் அழுக்கேறிய அரசியல் கட்சிகளால் ஆழப்புதைக்கப்பட்டு வரும் அய்யா கக்கன் அவர்கள், இது போன்ற மாபெரும் நம்மினத் தலைவர்களை மறந்துவிட்டோம். அடையாளம் காட்டிட அயர்ந்து விட்டோம். எங்கள் இனத்தவர் எவருக்கும் சளைத்தவர் அல்ல என்று இவர்களைத் தூக்கிப் பிடித்து இன எழுச்சிக்கு வித்திடுவோம்.
அறிவர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்கு பின்பு புற்றீசல் போல் முளைக்கத் துவங்கிய நூற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் அறிவர் அம்பேத்கரை கடவுளாகவும், தெய்வமாகவும், சிலை வைத்து வழிபடத் துவங்கினர். அறிவர் அம்பேத்கர் அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்விக்கான கருத்தியலையும் உரிமைகளையும் முன்னெடுக்கத் தவறிவிட்டனர். இதன் விளைவு ஒட்டுமொத்த பறையரினத்தையும் ஆதிக்கச்சாதி இந்துக்களிடமும், பிராமணியத்திடமும் அரசியல் பங்கேற்பு என்ற சமரச உடன்பாட்டின் மூலம் சரணடைய வைத்துவிட்டனர். இவ்வாறு சுயநலம் சார்ந்து எந்தவித கொள்கையும் நோக்கமும் இல்லாமல் அண்ணலை வியாபாரப் பொருளாகப் பார்க்கப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாடு பறையர் பேரவை என்ற சமூக அமைப்பை ஆரம்பிப்பதன் நோக்கத்தினை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்து இதன் எல்லைகளையும் நோக்கத்தினையும் விளக்கியிருக்கிறா அய்யா சி.சாமுவேல் பறையர். இந்த நோக்கத்தினை மையப்படுத்தி தென்தமிழகத்து பறையர் இளைஞர்களை ஒருங்கிணைத்து பறையர் மக்களின் வாழ்வாதாரங் களுக்காகப் பேராடி வந்தார்.
பறையரின மக்கள் மீது வன்கொடுமைகள் நடக்கும் பகுதிகளில், நேரடியாகக் களம் புகுந்து பதில் தாக்குதலில் ஈடுபடும் போக்கை பறையர் இளைஞர்கள் மத்தியில் வளர்த்தார். அதன் மூலம், 1990-களில் பெருவீச்சாய் புறப்பட்ட பறையர் அரசியலுக்கு இயக்க ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் தொடக்கத்தை அளித்தவர் சாமுவேல் பறையர் என்றுதான் சொல்லவேண்டும். 1990களின் தொடக்கத்தில் தென்தமிழகப் பகுதிகளில் பறையர் சமூக மக்களின் தன்மான, சமூக, அரசியல் விழிப்புணர்விற்கு ஆழமாக அடித்தளத்தை கட்டமைத்தவர் சாமுவேல் பறையர். கிராமம் கிராமமாக திண்ணைகளில் அமர்ந்து இளைஞர் பயிற்சி வகுப்புகளை நடத்தினார். மதுரை மாநகரத்தில் கையால் மலம் அள்ளிச் சுமந்த பறையர் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் சாமுவேல் பறையர் ஆற்றிய மிகத்தீவிரமான களப்பணிகளால், அம்மக்கள் மதிப்பிற்குரிய மாற்றுத்தொழில்களுக்கு மாறினர். அதனால் அவர்களுக்கு எற்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதில்தரும் பாதுகாப்பு அரணாக நின்றார். அதனால், மதுரை நகரிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கினார்.
பறையர்களை அரசியல் சக்தியாகத் திரட்டும் நோக்கில் 1991-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு பறையர் பேரவையின் வாயிலாகத் தமிழகம் முழுவதும் பறையர்கள் குறித்த வரலாற்று அறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இளையபெருமாள், வை. பாலசுந்தரம் போன்றோரின் கட்சிச்சார்பு அரசியலுக்கு எதிராக சாமுவேல் பறையர் நடத்திய பரப்புரைகள், தனித்த அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெருமளவிலான பறையர் இளைஞர்களிடையே ஏற்படுத்தியது. அதன் விளைவாகத், தென்தமிழகத்தில் பறையர் குடியிருப்புகள் முழுவதிலும் தமிழ்நாடு பறையர் பேரவையின் கொடிகள் பறந்தன. பேரவையின் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டன. வீடு வீடாக பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. சேரிகள் தோறும் அம்பேத்கரின் சிலைகள் நிறுவப்பட்டன. விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திருச்சி போன்ற மாவட்டங்களில் எப்படிப்பட்ட தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் மனத்துணிவை பறையர் சமூக மக்களிடையே உருவாக்கி, அம்மக்களின் அரசியல் எழுச்சிக்கு அடித்தளமிட்டவர் அய்யா.சி. சாமுவேல் பறையர்.
1990களில் பறையர்கள் பல்வேறு கட்சிகளில் இயங்கி பல்வேறு கருத்தியலோடு பயணித்து வந்தனர். இவர்களுக்கு எது சரியான கருத்தியல் எதனைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலே பயணித்து வந்தனர். இது போன்ற சிக்கலைத் தீர்க்கவே மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893-இல் தொடங்கிய ‘பறையன்’ இதழை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும், பறையர்களுக்கான கருத்தியல் பரப்புகின்ற தனி ஏடு வரவேண்டும் என்ற உயரிய நோக்கில் ‘பறையர் குரல்’ இதழை ‘பறையன்’ இதழ் நூற்றாண்டு விழாவின் (1993) போது வெளியிட்டார். முதல் இதழானது 12-04-1993 அன்று தேவநேயப் பாவணார் நூலகக் கட்டிடத்தில் முனைவர்.வி. பலராமன் (தொழிலாளர் நல இணை ஆணையர்) அவர்கள் தலைமையில் வெளியீட்டு விழா நடந்துள்ளது. முதல் இதழை மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கொள்ளுப்பேத்தியான முனைவர். நிர்மலா அருள்பிரகாசம் வெளியிட செல்வி.மு. சங்கமித்திரை பெற்றிருக்கிறார்.

மறைக்கப்பட்ட வீரமங்கை குயிலியின் வரலாறும் புலப்படும் உண்மைகளும்-Veeramangai Kuyili History


சமீப காலங்களில் வீர மங்கை குயிலியைச் சாதி அடையாளம் பூசுவதில் பள்ளர்களும் அருந்ததியர்களும் போட்டாப் போட்டி நடத்தி வருகிறார்கள். இவர்களது போட்டாப் போட்டிதான், உண்மையில் குயிலி யார் என்ற ஆய்வுக்கு இட்டுச் செல்கிறது.


பல நூற்றாண்டுகளாகப் பெண்கள் ஆணாதிக்கம், சாதியம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் போன்ற எல்லா வகையிலும் ஒடுக்கப்பட்டு அக வாழ்வினை மட்டுமே மேற்கொண்டதாக வரலாறு கூறுகின்றது. இன்றைய சூழலில் பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில படைப்புகள் மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாகப் பிராமணியம் அல்லது சாதி இந்துக்களின் அடையாளங்களையும் தியாகங்களையும் முன்னிறுத்தியப் படைப்புகளே அதிகமாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. மற்ற படைப்புகளெல்லாம் சாதியப் பார்வையில் மழுங்கடிக்கப்படுகின்றது. எந்த சமூக அமைப்பில் சாதியப்பாகுபாடுகள் அதிகம் இருக்கின்றதோ அங்கு பெண்ணடிமைத்தனம் ஆழமாக நிலை நிறுத்தப்படுகின்றது.
இந்தியச் சூழலில் சாதிகளாலும், பொருளாதாரப் படிநிலைகளாலும் பிரிந்து கிடக்கின்ற சமூகத்தில் வாழ்கின்ற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.
இத்தகையச் சமூகக் கட்டமைப்பால் தான் நவீனப் பெண்ணியப் படைப்பாளிகள் அனைத்துப் படைப்புகளையும் உயர்சாதி அணுகுமுறையோடு படைத்து வந்திருக்கிறார்கள். நாம் வாழ்கின்ற சமகாலச் சூழலிலே பெண்ணுக்கான இருப்புவெளி எத்தகையதாக விளங்குகின்றது என்பதை கண்முன் காண முடிகின்றது. அவ்வாறிருக்கையில் இந்திய விடுதலைக்கு முதன் முதலில் வித்திட்ட வீரமங்கைக் குயிலி வரலாறு உயர்சாதி இந்துக்களால் மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்திருக்கலாம் என்பதை உறுதியாக அறிய முடிகின்றது.
“இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது அடிமைச் சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப் படைப்போராளி” என்கிறோம். பன்னாட்டளவில் தற்கொலைப் போராளிகள் என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் தான் உருவாகின்றது. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு முன்பே (1780-இல்) பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்றப் போர்க்களத்தில்தான் முதன்முதலாக ‘தற்கொலைப் போராளி’ உருவானார் என்பது நாம் யாரும் அறியாதது. அந்தப் போராளி வீரமங்கையின் பெயர்தான் ‘குயிலி’
இந்திய விடுதலைப் போரில் பெண்களின் பங்களிப்பு என்ற சிந்தனையோட்டத்தில் வேலுநாச்சியார், ராணி மங்கம்மாள், ஜான்சிராணி போன்றோரின் பெயர்கள் தான் அனைவரின் மனதிலும் முன்னதாக வரும். இவர்கள் அனைவரும் தாம் பிறந்து வாழ்ந்த சமூக அமைப்பால் தங்களின் அரசியல் ஆளுமையை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் அதே காலகட்டத்தில் வேலு நாச்சியாரின் உயிர்த்தோழியாகவும், பெண்கள் படையின் தளபதியாகவும் விளங்கிய குயிலி எந்த ஒரு அரசியல் பின்புலமோ, அதிகார மைய பின்புலமோ அற்ற நிலையில் தன் வீரத்தாலும், விவேகத்தாலும் உலக வரலாற்றில் முதல் தற்கொலைப் போராளியாகத் தன்னை வெளிப்படுத்தினார், வீரத்தாய் ‘குயிலி’ என்ற சாம்பான் சமூகத்துக் கன்னிப் பெண். அவள் பறையராகப் பிறந்த காரணத்திற்காக அவரது வரலாற்றையே மறைத்துவிட்டது ஆதிக்கச் சமூகம். ஆனால், அவள் வரலாறு தற்போது மீள்கட்டமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாகத்தான் அய்யா. ஆலம்பட்டு சோ.உலகநாதன் அவர்கள், “குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி” என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார்.


குயிலியின் தியாகங்கள்
‘குயிலியின் தியாகத்தில் வேலு நாச்சியாரின் வெற்றி’ என்ற நூலிலிருந்து குயிலியின் வீர வரலாறு சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.
முத்துவடுகநாதர் மறைவிற்குப் பின் விருப்பாச்சியில் வேலுநாச்சியாரின் படைகள் போர்பயிற்சி மேற்கொள்கின்றன. அப்போது சிலம்பு வாத்தியார் வெற்றிவேல் குயிலியை அழைத்து நீ என்ன சாதி? என்று தெரிந்தும் தெரியாதது போல் வினவுகிறார். அதையறிந்த குயிலி எந்தத் தயக்கமும் இன்றி நான் சாம்பான் இனத்தைச் சார்ந்த பெண் என்று கூறுகிறாள். தாழ்ந்த சாதிப் பெண் தாழ்வு மனப்பான்மையும், கட்டளைக்குக் கீழ்படிதல் உணர்வோடும் தான் இருப்பார்கள். அதை பயன்படுத்தித் தன் திட்டத்தை நிறைவேற்ற படிப்பறிவில்லாத குயிலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தவறாகக் கணக்கிட்டுக் கொண்டு வேலுநாச்சியாரைப் பற்றியக் கடிதத்தை கொடுக்கிறார். வாங்கி, தன் குடிலுக்குச் சென்று படித்தக் குயிலி குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் நோக்கி விரைகிறாள். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்பு வாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியை வேலுநாச்சியார் உள்ளிட்ட அனைவரும் காண்கிறார்கள்.
குயிலி ஓடிவந்து வேலுநாச்சியாரிடம் கதறியழுதாள் கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் ஆங்கிலேயரின் கைக்கூலியான மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார். நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என்று அறிந்த வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
மேற்கூறிய செய்திகளிலிருந்து நாம் மிகவும் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது குயிலி படிக்கத் தெரிந்தவள். அறிவும் விவேகமும் நிறைந்தவள். அவ்வாறெனில் 1770-களில் சாம்பான் குலப்பெண்கள் படிப்பறிவு நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு அக்காலச் சூழலில் கல்வி கற்றிருப்பார்கள் என்பதையும் குயிலியின் வரலாற்று மீள்கட்டமைப்போடு இணைந்த தேடலாகத் தொடங்க வேண்டும்.
மற்றொரு சம்பவத்தினையும் இங்கு நினைவு கூறலாம். சிலம்பு வாத்தியாரைக் கொன்றதால் சாதிவெறியர்கள் சிவகங்கையில் மல்லாரிராயன் தலைமையில் சாதிக்கலவரத்தைத் தூண்டுகின்றனர். ஆதலால் குயிலியின் பாதுகாப்பிற்காக வேலுநாச்சியார் அவளை அவருடன் தங்க வைத்துக் கொள்கிறார். ஒரு நாள் நாச்சியார் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் குயிலி தூக்கம் வராமல் ராணியின் மஞ்சத்துக்கருகில் அமர்ந்திருக்கிறாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு சுதாகரித்து, ஏதோ நடக்கப்போகிறது என்று அவளது ஆழ் மனம் கூறியதால் மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து அறையினுள் இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனையும் போது மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் இரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலுநாச்சியார் எழுந்து கொண்டார். அந்த கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார். அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். இதுபோன்று குயிலியின் வீரச் செயல்கள் குறித்த பல்வேறு சம்பவங்களை இந்த புத்தகத்தில் காணலாம்.
குயிலியின் பிறப்பு குறித்த விவாதங்கள்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முதலில் வித்திட்ட, சிவகங்கைச் சீமையின் விடுதலைக்காகவும் வேலுநாச்சியாரின் வெற்றிக்காகவும் உயிர்நீத்தக் குயிலி பிறந்த ஊர் ‘பாசாங்கரை’ எனும் கிராமம். இது சிவகங்கையிலிருந்து சுமார் 9 கி.மீ தூரத்தில் மேற்கு திசையில் அமைந்துள்ளது. சிறிய கிராமமான பசாங்கரையில் குறிப்பிட்ட மூன்று இனங்கள் மட்டுமே பூர்வீகமாக வாழ்ந்து வருகின்றார்கள். அதிலே பறையர் இனமும் முத்திரையர் இனமும் பிள்ளைமார் இனமுமே வசிக்கின்றனர். குயிலி குறித்த ஒலைச் சுவடிகள் எங்கு இருக்கின்றது அல்லது மறைக்கப்பட்டதா என்றெல்லாம் ஆய்வுகள் நடந்து வருகின்றது. அவைகள் கிடைத்தால் குயிலி குறித்தும் பறையரின முன்னோடிகள் குறித்தும் இன்னும் அதிகளவில் அறிய முடியும்.
சிவகங்கை அரண்மனையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து அமைந்திருக்கும் இடம் பொன்னாங்குளம். இதனருகேதான் வீரமங்கைக் குயிலிக்கு கோவில் வைத்து வழிபட்டு வருவதாக அய்யா. ஆலம்பட்டு சோ. உலகநாதன் அவர்களின் வரலாற்று ஆய்வு நூலின் வழி அறிய முடிகின்றது. அதாவது,
“அய்யா, அரண்மனையில் யாரோ தீக்குளித்தார்களாம். அது ஒரு கன்னிப் பெண்ணாம். தீக்குளித்தக் கன்னிப் பெண்ணை அரண்மனையார் இங்கே புதைத்துள்ளார்களாம் இந்தக் கோவிலுக்குப் பெயர் தீப்பாஞ்ச அம்மன்”
மேலும் “அய்யா இது மிகவும் சக்திவாய்ந்த தெய்வம். அந்தப் பக்கம் கால் நீட்டிப் படுக்கக்கூட அனுமதிக்காது. அதை நாங்கள் தெய்வமாக வழிபட்டு வருகிறோம்” என்று கூறினார்கள்.
இதன் மூலமாக 1780-களில் வேலுநாச்சியாரின் வெற்றிக்காக அரண்மனைப் போரில் மனித வெடிகுண்டாக மாறித் தீப்பாய்ந்து உயிர்நீத்த குயிலியின் தியாக வரலாற்றை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது இந்தக் கோவில்.
குயிலியின் வீரச் செயல்கள் குறித்தும் பிறப்பு குறித்தும் திரு. கல்லல் அன்பழகன் அவர்களின் இணையச் செய்தி வாயிலாகவும் சில செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. வேலு நாச்சியார் தீண்டாமையால் கோவிலுக்குள் போக முடியாமல் இருந்த மருதாணி (மருதாயி) என்ற குடும்பர் இனப் பெண்ணை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். வீரத்தாய் குயிலியையும் மருதிருவரையும், நாத்திகக் கவிஞன் வைரவனையும் கி.பி.1780-இல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கூட்டி சென்றார். குயிலிக்காகத் தன் சொந்தச் சமூகத்தவரை எதிர்த்தார். ஏழு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையில் தன்னுடனே தனியறையில் குயிலியைத் தங்க வைத்துக் கொண்டார். தனக்காகத் தன் உயிரைக் கொடுத்த உடையாள் என்ற பறையர் சமூகப் பெண்ணின் நினைவாக, தான் உருவாக்கிய அனைத்து சமூகப் பெண்களைக் கொண்ட பெண்கள் படையணிக்கு ‘உடையாள் பெண்கள் படை’ என்று பெயர் வைத்தார், அதற்கு தளபதியாய் உடையாளின் சமூகத்தைச் சேர்ந்த வீரத்திலும் விவேகத்திலும் சிறந்த குயிலியைத் தான் நியமித்தார். தன் ஏழு ஆண்டு கால தலைமறைவு வாழ்க்கைக்கு பின் சிவகங்கைச் சீமையை மீட்டு, தன் விதவைக் கோலத்தைக் கழைத்து கழுத்திலிருந்தத் தன் வைரத்தாலியை உடையாள் புதைக்கப்பட்ட இடத்தில் அவளின் வீரத்திற்கும் தியாகத்திற்கும் சமர்ப்பணமாய் கழற்றி அணிவிக்கிறார். ஆற்காடு நவாப்-ஆங்கில படையிடம் ‘வெட்டுப்பட்டு செத்த உடையாள்’ இன்று வெட்டுடைய காளி அம்மனாக வணங்கப்படுகிறாள். வெட்டுப்பட்டு செத்த உடையாள் ‘கொல்லங்குடி கருப்பாயி’ என்ற நாட்டுப்புறப் பாடகியின் தந்தை வழி பாட்டி என்றும் கூறப்படுகிறது. குயிலி வீரமாகாளியாகவும் தீப்பாஞ்ச அம்மனாகவும் வணக்கப்படுகிறாள். குயிலி கும்மிப் பாடல்களும் சிலவிடங்களில் பாடப்படுகின்றது.
வெட்டுடைய காளி கோவில் உருவாகுவதற்க்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் உண்டு. கி.பி.1772 ஜூன் 25-ஆம் நாள் காளையார்கோவிலில் சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகரும், அவரது இளையமனைவி கெளரி நாச்சியாரும் காளையார் கோவிலில் ஆங்கிலத் தளபதி பான்ஜோர் படைகளால் கொல்லப்பட்டனர். மன்னர் முத்து வடுகரோடு தாம் கொன்றது முதல் மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் என்று நினைத்திருந்தவர்களுக்கு, பிறகு தான் தெரிந்தது வேலு நாச்சியார் தனது வாரிசான வெள்ளச்சியோடு கொல்லங்குடி அரண்மனையில் முகாமிட்டிருந்தத் தகவல். கொலைவெறியோடு கொல்லங்குடி நோக்கி புறப்பட்டது பான்ஜோர் படை.
தகவலறிந்த வீரமங்கை வேலுநாச்சியார் தன்மகள் வெள்ளச்சியைச் சிலம்பு வாத்தியார் வெற்றிவேலோடு அனுப்பி வைத்துவிட்டு தான் மட்டும் தனியாகக் காட்டுக்குள் செல்கிறார். செல்லும் வழியில் தனக்குத் தெரிந்த பெண்ணான உடையாளைச் சந்திக்கிறார். தகவலறிந்த உடையாள் ராணியைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆங்கிலேயர் நடமாட்டம் அதிகமில்லாத வழியைக் காண்பிக்கிறாள். அகமகிழ்ந்த நாச்சியார் தான் அணிந்திருந்த விலையுயர்ந்த தன் பட்டுத் துகிலை அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். சிறிது நேரம் கழித்து வந்த ஆங்கிலப் படைகள் வேலுநாச்சியாரின் துகிலைப் பார்த்தவுடன் எங்கே என்று கேட்கிறார்கள். எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியும் ஏற்க மறுத்த ஆங்கிலப் படைகள் அவளின் தலையைத் தனியாக வெட்டி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். அதன்பின் அவளின் உறவினர்கள் அவ்விடத்திலே உடையாளைப் புதைத்து விடுகின்றனர். அன்று முதல் அவள் ‘வெட்டுப்பட்ட உடையாள்’ என்று மக்களால் வணங்கப்பட்டிருக்கிறாள்.
அந்த வரலாற்றை மறைத்து அவளின் நினைவிடத்தை அபகரித்ததோடல்லாமல் புனிதம் என்ற பெயரில் ‘வெட்டுப்பட்ட உடையாள்’ என்ற வீரபறச்சியை ‘வெட்டுடைய காளி அம்மன்’ என்று மாற்றிவிட்டனர். நினைவு நடுகல்லில் இருந்த வீரமங்கை வேலு நாச்சியாரின் வைரத்தாலி பிற்காலத்தில் காளியாக்கப்பட்ட சிற்பத்தின் கையில் இருக்கும் சூலாயுதத்தில் வைரக்கற்களாகப் பதித்துள்ளனர்.

வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், வேலுநாச்சியார் அவர்களது நினைவு மண்டப வளாகத்திலேயே வீரத்தாய் குயிலிக்கும் நினைவுச் சின்னத்தினை தமிழக அரசு 19.07.2014 அன்று திறந்து வைத்தது.

 

இரட்டைமலை சீனிவாசன்-Rettamalai Srinivasan


தமிழகத்தில் பட்டியலின மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 1

இந்திய அளவிலான பட்டியலின மக்களின் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்,

திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். பட்டியலின மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். “பறையர்” மகாசன சபையைத் தோற்றுவித்து, “பறையன்” என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர் தான் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945).

இளமைக்காலம்

சீனிவாசன் பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்கிற சிற்றூரில் சடையன் என்பவருக்குப் பிறந்தார். தெய்வபக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்ததால் இவருக்குச் சீனிவாசன் எனப் பெயரிட்டனர். தொடக்கப்பள்ளியில் தந்தையின் பெயரின் முன் எழுத்திற்குப் பதிலாகத் தந்தையின் முழுப்பெயரையும் சேர்த்து எழுதிவிட்டார்கள். அதனால் இரட்டைமலை சீனிவாசன் ஆனார்.

கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை தாண்டவமாடியதால், இவரது குடும்பத்தார் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றனர்.

வாழ்க்கை வரலாறு நூல்

இரட்டைமலை சீனிவாசன் 1939 இல் அவருடைய தன் வரலாற்றை அவரே சுருக்கமாக எழுதி ”திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்” என்ற பெயரில் 30 பக்க நூல் ஒன்றை வெளியிட்டார். இதனால் ஓரளவு அவரது இளமைக்காலம் குறித்தும் அவருடைய அரசியல் மற்றும் சமூகப் பணிகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.

கல்வியும் குடும்பமும்

திண்ணைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பட்டினியும், பசியும், வறுமையும் கூடவே விரட்டியது. ஆனாலும், பெற்றோருடைய விடா முயற்சியாலும், கல்வி மீது கொண்டிருந்த பேரார்வத்தாலும் தஞ்சையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். குடும்பத்தின் வறுமையினையும் தாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்தார். இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றார். தமிழகத்திலேயே பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.

தீண்டாமைக் கொடுமைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்பதைப் பற்றியே எந்நேரமும் எண்ணிக் கொண்டிருந்தார், 1887 ஆம் ஆண்டில் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயர் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 இல் சென்னைக்கு வந்தார்.

ஒரு மனிதன் சமுதாயச் சிந்தனையாளராக-சீர்திருத்தவாதியாக-போராட்டக்காரராக-உருவாக அந்த மனிதன் இளமையில் பட்டத் துன்பங்களும், அடைந்த அவமானங்களும், அனுபவித்தக் கொடுமைகளும் காரணமாக அமைகின்றன. இரட்டைமலை சீனிவாசன் தான் பள்ளி, கல்லூரி வாழ்க்கையின்போது அடைந்த துன்பங்களும், சாதிக் கொடுமைகளும் நாளடைவில் பட்டியலின சமுதாய மக்களின் விடுதலைக்குத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டின.

அம்பேத்கர் (ம) பெரியார் ஆகியவர்களுக்கெல்லாம் முன்னோடி

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 2

டாக்டர் அம்பேத்கர் 3 வயது குழந்தையாக இருந்த பொழுது  இந்த இரட்டைமலை சீனிவாசனார் இங்கு 28/04/1884  தமது தலைமையிலே போராட்டத்தை துவங்கி ஆங்கிலேய அரசாங்கத்திடம் போராடி பட்டியலின மக்களுக்கு பஞ்சமி நிலங்களை பெற்றுத்தந்தவர்

பறையர் மகாசன சபை

இரட்டைமலை சீனிவாசன் 1891 ஆம் ஆண்டு ‘பறையன் மகாஜன சபை’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தார். அந்த அமைப்பின் மூலம் பட்டியலின மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வைசிராயிடமும், ஆளுநரிடமும் முறையீடு செய்தார்.
இதே காலகட்டத்தில்தான் 1.12.1891-இல் பண்டித அயோத்திதாசர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1892-இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார்.

அயோத்திதாசரின் முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பறையன் இதழ்

இந்தியர்கள் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்து வதில் இருந்த சிற்சில தடைகள் 1835-ம் ஆண்டு முற்றிலுமாக நீக்கப்பட்ட பின்பு, இங்கு சுயமாய்ப் பத்திரிகைகள் நடத்தும் முயற்சிகள் எழுந்தன. இந்த வகையில் பட்டியல் வகுப்பினரும் பத்திரிகைகளைத் தொடங்கினார்கள். பஞ்சமன், பூலோக வியாசன், சூரியோதயம், மகாவிகடதூதன், திராவிட பாண்டியன் போன்றவை முன்னோடி இதழ்களாகும். இந்த நிலையில்தான் தாங்கள் எப்பெயரால் ஒடுக்கப் படுகிறோமோ அப்பெயராலேயே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என்னும் அறிவிப்போடு ‘பறையன்’ என்னும் இதழை இரட்டைமலை சீனிவாசன் 1893-ம் ஆண்டு தொடங்கினார். முதலில் மாத இதழாகவும், பின்னர் வார இதழாகவும் 1900-ம் ஆண்டு வரை இந்த இதழ் தவறாமல் வெளியானது. கிராமங்களில் நடைபெற்ற சமூகப் பிரச்சினைகள்கூட இந்த இதழுக்கு எழுதி அனுப்பப்பட்டன. அவற்றுள் பல்வேறு விஷயங்கள் விண்ணப்பங்களாக மாற்றப்பட்டு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறு பட்டியல் வகுப்பினரிடையே அரசியல் உரையாடலைக் கட்டமைப்பதில் இவ்விதழ் பங்காற்றியது.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 3

 

அது மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளிலும் பட்டியல் வகுப்பினர் சார்பாக இரட்டைமலை சீனிவாசன் தலையீடு செய்துவந்தார். எடுத்துக்காட்டாக, ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்தில் நடத்துவதென ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தபோது, அதை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று இந்திய தேசியவாதத் தலைவர்கள் கோரினார்கள். அது தொடர்பான கோரிக்கை விண்ணப்பம்கூட சில நூறு கையொப்பங்களோடு அரசிடம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் நடத்தினால் உயர் வகுப்பினர் பங்குபெற்று தங்கள் மீது சாதிபேதம் பாராட்டுவார்கள் என்பதால், அந்தத் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த வேண்டும் என்று பல்வேறு பட்டியல் சமூக குழுவினரும் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்கள். இதில், இரட்டை மலை சீனிவாசனின் பங்கு முக்கியமானது. 1894-ம் ஆண்டு இரட்டைமலை சீனிவாசன் தலைமையில் 3,412 பேரின் கையொப்பங்களோடு இங்கிலாந்துக்கு எதிர் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இது தொடர் பாகத் தனிநூலாக எழுதக்கூடிய அளவுக்கு இந்தப் போராட்டங்கள் விரிந்திருந்தன. 1923-க்குப் பின்னர், சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பி னராகவும் மேலவை உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியமானவை. சட்டப்பேரவையில் அவரால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட உரிமைகள் தொடர்பாக அவர் சிறு வெளியீடுகளை வெளியிட்டுவந்தார். அவ்வாறு அவரால் வெளியிடப் பட்டு, இன்றைக்குக் கிடைக்கும் பிரசுரங்கள் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை.

தென் ஆப்பிரிக்கப் பயணம்

இரட்டைமலை சீனிவாசன் 1900-ஆம் ஆண்டில் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 2
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 4

அப்போது காந்தியடிகள் அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ‘மோ.க.காந்தி’ என்று தமிழில் கையெழுத்து இடக்காரணமாக இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் என்பது வரலாற்றுப் பதிவு!

இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே இங்கு 1916-இல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அதனை ஒட்டி 1917-இல் ஆதித் திராவிட மகாசபை எம். சி. இராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது. 1921இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பினார்.

சட்டசபை உறுப்பினர்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920 இல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்குத் பட்டியல் இனத்தில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். (1937 வரை ஓர் அவை மட்டுமே இருந்தது. 1937 முதல் இரண்டு அவைகள் செயல்பட்டன) இரண்டாவது தேர்தலுக்குப் பின் 19.11.1923-இல் இரட்டைமலை சீனிவாசன், எல். சி. குருசாமி உள்ளிட்ட 10 பேர் (தாழ்த்தப்பட்டோர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை பட்டியல் இனத்தவர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர்.

சட்டமன்ற செயல்பாடுகள்

22.08.1924-இல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் ஒரு முக்கியமான தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அரசும் ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்டது.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 5

(அ) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் யாதொரு பட்டணம், அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கமாயினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லையென்பதும்,

(ஆ) இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எம்மாதிரியாகவும், எவ்வளவு மட்டிலும் யாதொரு அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியன இவைகளுக்குள் போகலாமோ அம்மாதிரியாகவும் அம்மட்டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், அரசின் கொள்கையாகும் என்று அறிவிக்கப்பட்டது. இது அனைத்துத் துறைகளுக்கும், அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. – சி.பி.காட்டோஸ் அரசுச் செயலாளர்

இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-இல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார். அப்போது ஆதிதிராவிட மக்களின் வாழ்வியல்(சிவில்) உரிமைகளுக்காக ஓயாது குரல் கொடுத்து வந்தார்.

20.01.1922 இல் எம். சி. இராசா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதித்திராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என இரட்டைமலை சீனிவாசன் 25.08.1924இல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.

பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராக உள்ளனர். அவர்கள் சேரிகளுக்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – தாழ்த்தப்பட்டவர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் எனச் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல். சி. குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை 60 ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

06.02.1925 அன்று சட்டசபையில் பேசிய இரட்டைமலை சீனிவாசன், தெலுங்கு மொழி தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகாவை ஆதி ஆந்திரர் என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் மலையாளத் திராவிடர் என அழைக்கக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் உரையின் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை 06.02.1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம். சி. ராஜா, சாமி சகஜானந்தம் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழிலேயே பேசினார்கள்.

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு 29.01.1928இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி. ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பெ.மா மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும் ஆகும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும். உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதித் திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928இல் தான் முதன்முறையாக ஆதித் திராவிட மாணவர்களுக்கு கதவு திறக்கப்பட்டது. மதுரை பிள்ளை வரவேற்புரையில் பச்சையப்பன் கல்விக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.)

மது ஒழிப்புத் தீர்மானம்

இரட்டைமலை சீனிவாசனின் மற்றுமொரு முக்கிய தீர்மானம் மதுக்கடைகளை மூடவேண்டுமென்பது. கலால் வரி அதிகமாகக் கிடைப்பதால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக சீனிவாசன் கருதினார். அறவே கடையை மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 24.09.1929-இல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பு

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின் சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ் நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார். திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான், எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான் பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார். மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத் தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால், மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.

அப்போது மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் “உங்கள் நாட்டில் இப்படிப்பட்டவர்கள் யாராவது கீழே விழுந்துவிட்டால் கூடத் தூக்கிவிட மாட்டார்களா? அவர்கள் சாதியின் பெயரால் அப்படியே கிடக்கத்தான் வேண்டுமா?”-என்று விழி பிதுங்க வினாத் தொடுத்தார். “ஆமாம்; உங்கள் ஆட்சியிலே, இந்தியாவிலே இது தான் நடைபெறுகிறது” என்று பதில் மொழி பகன்றார். மேலும், இந்த வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் பேசுகிறபோது, “தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்; அப்போதுதான் தீண்டாமைக் கொடுமை ஒழியும். சட்டமன்றத்திலும், ஆதிதிராவிடர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் அவர்கள் முன்னேற்றம் அடைய முடியும்” -என்று வலியுறுத்தினார்.
காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு இலண்டனில் காந்தியுடன் நேரில் சந்தித்துப் பிரச்சினையைச் சுமூகமாக முடித்துவிட முயன்றார். ஆனால் பலன் இல்லை. அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார். கடைசி வரையில் அம்பேத்கருடனும், தமிழகத்தில் திராவிட இயக்கத்தினருடனும் நட்புணர்வுடன் செயல்பட்டு வந்தார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார்.

இலண்டன் வட்டமேசை மாநாட்டில் இவர்கள் இருவரும் தயாரித்துக் கொடுத்த ஆவணம், தாழ்த்தப்பட்ட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்திருந்தது.

ஆலய நுழைவுத் தீர்மானம்

1933 சனவரி 31ஆம் நாள் சென்னை சட்டசபையில் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது 56 வாக்குகள், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும் 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.

மதமாற்றக் கருத்து

அம்பேத்கர் 1935இல் தான் மதம் மாற வேண்டு என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார்.

முரண்களை ஒதுக்கும் வரலாறு

வரலாற்றை எழுதும்போது சம்பந்தப்பட்ட காலத்தின் வெவ்வேறு குரல்கள், முரண்கள் போன்றவற்றை மௌனமாக ஆக்கிவிட்டு ஒற்றை வரலாற்றைக் கட்டியெழுப்பும் முயற்சிகளே பெரும்பாலும் நடக் கின்றன. உடனடி அரசியல் நோக்கங்களுக்காக வரலாறு எழுதப்படுவதால் வரும் தீமைகள் இவை. பட்டியலின அரசியல் வரலாற்றியலிலும் இது போன்ற தருணங்கள் உண்டு. ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு, வரலாறு பற்றி வெவ்வேறு கருத்து நிலை கொண்ட குழுவினர் எல்லாக் காலத்திலும் இருந்துள்ளனர். இரட்டைமலை சீனிவாசனைப் பற்றித் தேடும்போது இந்த அம்சம் பளிச்சிடுகிறது.

மாறுபட்ட அணுகுமுறை

இரட்டைமலை சீனிவாசனின் அரசியல் பயணத்தைக் கவனிக்கிறபோது அவர் பல்வேறு நிலைப்பாடுகள், ஆளுமைகள் சார்ந்து ஊடாடிவந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்தி தாசர் பவுத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பவுத்தம் தழுவவில்லை. பின்னர், அம்பேத்கரோடு தொடர்பு கொண்டிருந்தபோதும் அவருடைய மதமாற்றம் பற்றிய கருத்தோடு சீனிவாசன் இணக்கம் கொள்ளவில்லை. ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். இதன்படி, பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி, ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந் தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்ப கோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சீனிவாசன் பேசியிருக்கிறார்.

1900-ல் சீனிவாசன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார். அவர் இந்தியாவில் இல்லாத காலத்திலும் அவர் தொடங்கி விட்டுச்சென்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு அவருக்கு இருந்தது.

மறைவு:

இரட்டைமலை சீனிவாசனின் பணிகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு, அவருக்கு ‘இராவ்சாகிப்’, ‘திவான் பதூர்’, ‘இராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்துச் சிறப்பித்தது.

இரட்டை மலை சீனிவாசனின் பணியைப் பாராட்டி திரு.வி.க. அவர்கள், ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 3Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன்
Rettamalai Srinivasan-இரட்டைமலை சீனிவாசன் 6

கொத்தடிமைகளாக வாழ்ந்த மக்களை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கிப் போனவர்களை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்! – இருண்ட உலகில் பயணம் செய்தவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்! ஊமைச் சமுதாய மக்களைப் பேச வைத்தவர்! – உரிமைகளைப் பெற வைத்தவர்!- ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தத்தளித்துக் கிடந்த மக்களின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர்! தான் உறங்காமல், உறங்கிக் கொண்டிருந்தவர்களைத் தட்டி எழுப்பி உசிப்பியவர்! தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடிய ‘உத்தமர் தாத்தா’! அப்பெரியவர் இரட்டைமலை சீனிவாசன் 18.09.1945 ஆம் நாள் தனது எண்பத்தி ஆறாம் வயதில் இயற்கை எய்தினார்.

இந்திய நடுவண் அரசு, 15.08.2000 இல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பு செய்தது.

பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)-P.M.Madurai Pillai(Paraiyar)


கொடைவள்ளல் கப்பல் ஓட்டிய ஆதித் தமிழர்(பறையர்) பெ.மா.மதுரைப்பிள்ளை அவர்களின் வரலாற்று சுருக்கம்:

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 1

ரங்கோன் மதுரைப்பிள்ளை என்று சொல்லிடும்போது ஏதோ கடல் கடந்து இத்தமிழ் மண்ணுக்கு வந்தவராக அவரை எவரும் நினைத்திரக்கூடாது.  1858-இல் முப்புறமும் உப்பு நீரால் சூழப்பட்ட இச்சென்னை மாநகரில் தொழிலதிபர் திரு. மார்க்கண்டமூர்த்தி -அம்மணியம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மைந்தனாக 1858 ல் திசம்பர் 26ஆம் நாள் மதுரைப்பிள்ளை பிறந்தார் பிறந்தார்.  இன்று சென்னை வேப்பேரியிலுள்ள சென்பால்ஸ் ஐஸ்கூல்தான் அன்று எஸ்.பி.ஜி. பள்ளியாக இருந்தது.  அந்தப்பள்ளியில் தான் அவரது இளமைக் கல்வி இனிதாக முடிந்தது.  அதன் பின் ரங்கோனிலுள்ள செயின்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் படித்து முடித்தார்.  தமது கல்லூரிப் படிப்பை சென்னை கிறிஸ்டியன் காலேஜில் பயின்றார்

1877-இல் சென்னை மாநில கவர்னர்.  பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக எழுத்தராக இருந்து பணியாற்றினார்.  அவரது தன்னல மறுப்பும், தளரான உழைப்பும் அவரை ரங்கோன் ஸ்ட்ராங் ஸ்டீல் என்ற அமைப்பில் பணியாற்ற வைத்தது.  அவர் ஒழுக்கம் நிறைந்தவராகவும் உயர்ந்த பண்புள்ளவராகவும், நன்னடத்தை மிக்கவராகவும், நம்பிக்கையுள்ளவராகவும் சிறந்து விளங்கின தால் அவர் கப்பல் துபாஷ் ஸ்டீவ்டென் என்கிற ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக நிறுவனத்தை சொந்தத்தில் ஆரம்பித்து திறமையாகவும் நடத்தினார்.

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 2

அன்றைய  ஆதிதிராவிட மகாஜன சங்கத்தில் முக்கியத் தொண்டர்களாக இருந்து சமுதாயத்திற்கு சிறப்பாக உழைத்தவர்கள் புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மதுரை வாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் பத்தர் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள்.  இந்த மகாஜன சங்கத்தின் போஷகராக இருந்த மதுரைப் பிள்ளை அவர்கள் சங்க சமூக உழைப்பிற்கும் ஊழியத்திற்கும் உன்னத மதிப்பும் மரியாதையும் தந்து சமூக ஊழியர்களை ஊக்குவிப்பதில் உற்சாகப் படுத்துவதில் அவர் மிக வல்லவர்

ஆதிதிராவிட மகாஜன சங்க வளர்ச்சிக்கு பாடுபட்டுழைத்த லாடர்ஸ் கேட் மதுரை வாசகம் மனைவியை இழந்தவராம்.  வாழ்க்கையில் மிக நலிவுற்று இருந்தாராம்.  நல்ல இடத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு இருந்தது.  அதற்கு அவரது வாழ்வு வளமுள்ளதாக இருந்திட வேண்டும்.  இதை வாயால் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கடிதம் மூலம் அதனை எழுதி வள்ளளிடம் நேரில் கொடுத்தாராம்.   படித்துப் பார்த்த வள்ளல் பெருமகன் உள்ளே சென்று மூவாயிரம் ரூபாய்களை ஒரு கவரில் போட்டு எவ்வித கேள்வியும் கேளாமல்  போதாவிட்டால் மீண்டும் வந்து வாங்கிக்கொள்ளும் என்று கூறினாராம்.  அந்த மூவாயிரம் ரூபாய் இன்று முப்பது ஆயிரத் துக்குச் சமம்.  ஒரு சவரன் 10 ரூபாய் விற்ற காலம் அந்தக் காலம்.

இது என் தேவைக்கு மேற்பட்ட தொகை, இதுவே போதும் என்று நன்றி உணர்ச்சி மேலிட கூறினாராம் லாடர்ஸ் கேட் மதுரை வாசகம் அவர்கள்.

கிருஸ்துவின் கொள்கைகளை பரப்பிடும் நோக்கத்தில் கிறிஸ்து மத ஸ்தாபனங்கள் அச்சிட்டு அறிக்கைகளை வெளியிடு வதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா.  அதுபோல் அறிவுக்கு ஊக்கம் தரும் நல்ல பல கதைகளையும் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார் இவ்வணிக வேந்தர்.

கல்வி அறிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிக அவசியமானது அவசரமானது என்பதை உணர்ந்து அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியை கட்டினார்.  தாழ்த்தப்பட்டோரின் கல்விக் கண்ணைத் திறந்து அவர்களைப் படிக்க ஊக்கமூட்டினார்.

வியாபார நிமிர்த்தமாக லன்டன், ஜெர்மன், உள்ளிட்ட உலகில் உள்ள பெரும் நகரங்களுக்கு சென்று மிகப்பெரும் தொழில் அதிபராக உச்சத்தில் நின்றார். 1885 இல் ரங்கூன் நகர கவுரவ நீதிபதியாகவும், 1880 இல் ரங்கூன் மாநகர கமிஷ்னராகவும் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மக்களின் நன்மதிப்பை பெற்று அப்பதவியில் தொடர்ந்து இருந்தார். எவரும் குற்றம் கூற முடியாதபடி அவரது சேவை இருந்தது கண்டு வியந்தோர் உண்டு

அவர் பல மேல் நாடுகளுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை நேரில் கண்டு வந்தவர்.  ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்காட்லாந்து, வேல்ஸ், டென்மார்க், நார்வே, இத்தாலி, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள மக்களைப் போல நம் மக்களும் வாழ்ந்திட வேண்டும் என்கிற பெரும் அவர் அவருக்கு அதிகம் உண்டு.

மதாபிமானம் நிறைந்தவர் அவர்.  அவரது வருவாயில் ஒரு பகுதியை இந்து கோயில்களுக்கு என்று நிரந்தரமாக கொடுத்து வந்தார்.  சொந்தத்தில் ஒரு கோயிலும் கட்டினார்.  அது அல்லாமல் கிறிஸ்தவகளுடைய மகம்மதியர்களுடைய கோயில் களுக்கும் ஸ்தாபனங்களுக்கும் உதவி புரிந்து வந்தார்.

எண்ணற்ற ஏழைகள் பழங்குடி தாழ்த்தப்பட்ட மக்கள் திருமணங்களை அவரே செலவு செய்து முடித்து வைத்திருக்கி றார்.  இது ஒன்றே அவரது நோக்கை பறை சாற்றும்.  எனவேதான் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் சக்ராதிபதியாத இருந்த ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்திக்கு 1906-இல் அவர் அறிமுகம் செய்விக்கப்பட்டார்.  சக்கரவர்த்தி பெருமிதத்தோடு சிறந்த பொதுத்தொண்டர் என்று பாராட்டினார்.

கோலார் தங்கச் சுரங்கம் காண்ட்ராக்ட் சம்பந்தமாக அவர் தங்கவயல் போவதுண்டு சமூகப் பெரியோர்களுக்கும், வறுமை யில் வாடும் மக்களுக்கும் உதவிகளை செய்ததோடு மருத்துவ வசதியும் செய்துள்ளார்.  சென்னை ராஜா சர் ராமசாமி ஆஸ்பிட்டல் என்பார்கள்.  அதற்கு பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.

பெருமைக்குரிய நம் பழங்குடி புலவர்கள் இவர்மீது கவி பாடி பல உயர்ந்த பரிசில்களை பெற்றிருக்கிறார்கள்.  இவர்களன்றி இந்து-கிறிஸ்தவ-மகமதிய புலவர்களும் பாடியுள்ளார்கள்.  சுமார் 50-க்கும் மேற்பட்ட புலவர்கள் பாடிய பாக்களைக் கொண்ட 1500 பக்கங்களுடைய மதுரைப் பிரபந்தம் என்ற நூல் ஒன்று அவர் புகழ்பாட இன்றும் நிலவுகிறது.

நம் சமூகப் புலவர்களாக தமிழ் சங்க ஆஸ்தான கவிராயர் சட்டவதானம் வைரக்கண் வேலாயுதப் புலவரிலிருந்து  திவ்ய கவி ராகுவேல்தாஸ், புரசை கிராமத் தெரு கவி சாமிநாத பண்டிதர், கோலார் அய்யாக்கண்ணு புலவர், சென்னை எழும்பூர் திரிசிரபுரம பெரும் புலவர் பெருமாள் பிள்ளை, ரங்கோன் புலவர் கபால மூர்த்தி  கத்திவாக்கம் கா.நா. செ.எல்லப்பதாசர், வண்ணியம்பதி சாக்கிதோமாஸ் புலவர் டி.பி. துரைசாமி அவர்களிலிருந்து திருமலைராயன் பட்டினம் வித்துவான் நா. இராமசாமி, நாகை மாணிக்க கவிராயர் சேலம் சதாவதானம் பாலசுப்பிரமணி அய்யர், தமிழ் பண்டிதர் பு.த. செய்யப்ப முதலி யார், கி. ஆதிமூல முதலியார் நாகை மு. செவந்தி மரைக்காயர், மதுரகவி தேவராஜம் பிள்ளை கும்பகோணம் மகா வித்துவான் கணபதி அய்யர் வரை அவரது கருணைமிக்க வள்ளல் தன்மைக் குப் புகழ் பாடி பொன்னும் பொருளும் பரிசு பெற்றதுண்டு.

P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை(பறையர்)
P.M.Madurai Pillai Paraiyar-பெ.மா.மதுரை பிள்ளை பறையர் 3

நன்கொடை நாயகன் நம் குல வள்ளல் ராவ்பகதூர் பி.எம். மதுரைப்பிள்ளை அவர்கள் வழங்குவதையே தன் தொழிலாக வும், கடமையாகவும் கொண்டிருந்தார் என்பது மிகையே ஆகாது.

கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என்று எவரெவரையோ குறிப்பிடும் வழக்கத்தைக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இனியாவது தெளிந்திட வேண்டும்.

ராவ் பகதூர் பி.எம்.மதுரை பிள்ளையின் உதார குணமும் செயலும் தமிழகத்து மக்களுக்கு சிறந்த படிப்பினையாகும் என்பதை பெருமையாகக் குறிப்பிடலாம்.

1912 இல் ஒரு புதிய கப்பலை வாங்கினார் மீனாட்சி என்று தனது மகளின் பெயரை சூட்டினார்.

1913 ஆம் ஆண்டு சூலை 15 நாள் கொடை வள்ளல் வெ.மா.மதுரைப்பிள்ளை மரணமடைந்தார், அவரது மரணத்தை அறிந்த ரங்கூன் அரசு விடுமுறை அறிவித்தது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். வெ.மா. மதுரைப்பிள்ளை அவர்களின் பேரப்பிள்ளைதான் பெண் விடுதலை போராளியும் , பட்டியலின மக்களின் போராளியுமான மீனாம்பாள் சிவராஜ் என்பது குறிப்பிடத்தக்கது

Paraiyar Photos-பறையர் படங்கள்


காவல் பறையன் வரலாறு


Kaaval Paraiyan காவல் பறையன்
Kaaval Paraiyan காவல் பறையன்

யார் இந்த காவல் பறையன்…?

காவலுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்…?

பறையர்கள் காவல் தொழில் புரிந்தனரா..?

ஆம் பறையர்கள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்…

பறையர்கள் அந்த காலக்கட்டத்தில் அடிமைவேலை செய்து வந்தார்கள் என்று வாயிலேயே வடை சுடும் ஆரிய வந்தேறிகளுக்கும்…தலித் தலித் என்று சொல்லி எம் இன வரலாற்றை மறைக்கும் தலித்தியவாதிகளுக்கும்….

இதோ எம் இனம் அஞ்சாமை குணத்தோடு  காவல் காத்து வந்த வரலாறு ஆதாரத்துடன்…

Kaaval Paraiyan History காவல் பறையன் 1
Kaaval Paraiyan காவல் பறையன் வரலாறு 1

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதே போல்….

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை “அரையன் அணுக்க கூவன் பறையனேன்” என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது.

சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டளை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் பறையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.

Paraiyar-Maraiyar-Sambavar / பறையர்-மறையர்-சாம்பவர்


நாடாண்ட நாகர்கள் நாம்…

மறையோதிய மறையர்கள் நாம்….

பாராண்ட பறையர்கள் நாம்……

மந்திரங்களை கற்ற வள்ளுவர்கள் நாம்…..

உலகையே அடக்கி ஆளும் சிவனை பெற்றெடுத்த

“சிவ சாம்பவர் குலம் நாம்”.13239470_1706014252983722_6072710580074387403_n

பறையர் வரலாறு-Paraiyar History


பூர்வகுடி மக்களாகிய … ஆதித்தமிழ் சாம்பவர்களாகிய…பறையர்களின் ஆதாரப்பூர்வமான வரலாறு விக்கிபீடியாவில் இருந்து பெறப்பட்டது

தொடக்கம்

பறையர், (அ)மறையர், சாம்பவர் என்பவர்கள் இந்தியாவின் ஒரு இன அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாக தமிழ் நாடு, கேரளா மற்றும் ஸ்ரீ லங்கா நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.

Paraiyar/Maraiyar/Sambavar- பறையர்/மறையர்/சாம்பவர்
Paraiyar/Maraiyar/Sambavar பறையர்/மறையர்/சாம்பவர்

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி, ஆதி திராவிடர்களின் மக்கள் தொகை 90 லட்சமாக உள்ளது. தமிழ் நாடு அரசின் பட்டியல் இனத்தவருள் ஆதி திராவிடர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

இச்சமூகக்குழுவினது பெயர் “பறை” என்பதில் இருந்து தோன்றியதாகும். பறை என்ற தமிழ்வார்த்தைக்கு சொல் என்ற பொருளாகும். இன்னமும் கூட கேரளாவில் பறை என்பது சொல் என்ற பொருளிலேயே வழங்கப்படுகின்றது. மறை ஓதிய(பறைந்த)வர்கள் என்பதால் இப்பெயர் ஏற்ப்பட்டது. மேலும் பௌத்த தம்மத்தை பறைந்தவர்கள் என்பதாலே இப்பெயர் ஏற்ப்பட்டது என்று அயோத்தி தாச பண்டிதர் குறிப்பிடுகின்றார். பெறவா என்பது இலங்கையின் பௌத்த மக்களிடையான பறையர் மக்கள்குழுவுக்கு இணையானவர்களாவர்.

வரலாறு

சங்க காலத்தில் பறையர்கள், மிகச்சிறந்ததொரு நிலையினை சமூகத்தில் பெற்றிருந்தனர். களப்பிரர் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் பறையர்கள் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி அடைந்தார்கள், அதுமட்டுமின்றி பிற (சோழ, பல்லவ) மன்னர்களால் கொடுமை செய்யப்பட்டனர் என ஏ.பி. வள்ளிநாயகம் தன் ஆய்வின் மூலம் எடுத்துரைக்கிறார். பின்னர் பிற்கால பறையர்கள் உழவையும், நெசவையுமே தொழிலாக கொண்டிருந்தனர்.

கிளய்டன் அவர்கள் கூற்றிலிருந்து, பறையர்கள் தமிழகத்தில் நீண்டதொரு வரலாறு அமையப்பெற்றதும், துணைக் கண்டத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தனர் என்பதற்கும் சான்று பகர்கின்றார். பிரான்சிஸ் அவர்கள் 1901 ஆம் ஆண்டின் மெட்ராஸ் சென்சஸ் பட்டியலை இயற்றியவர். அவர் கூற்றின்படி, கிறித்தவ ஆதிக்கம் தழைத்தோங்கிய பண்டைய தமிழ் படைப்புகளில் “பறையர்” என்னும் சொலவடை உபயோகத்தில் இல்லை எனவும், ஆனால் தனித்ததொரு இயல்பினையும், கிராமங்களில் அல்லாது கோட்டைகளில் வாழும் பழங்குடியின மக்களைப் (“Eyivs”) பற்றிய செய்திகள் நிரம்பியிருப்பதாக கூறுகின்றார். ஆம்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் பெருவாரியாக வாழ்ந்த இவர்களே பறையர்களின் முன்னோர்கள் ஆவர்.

தஞ்சை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சிவன் விழாக்களில் பறையர்கள் வெண்குடை ஏந்தி சிவனுக்கு முன்பு செல்லும் மரபு வழி உரிமை உடையவர் ஆவர்.

மறையர் [பறையர்]

எழுபதுக்கும் மேற்பட்ட சாதியினர் தமிழ்நாடு அரசினரால் அட்டவணைச் சாதியினர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர். இவர்களில, ஆதிதிராவிடர், என்ற சாதியினர்தான், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழ்நாட்டில்வாழ்கின்றனர். கல்வெட்டுகளிலும், செப்புப் பட்டயங்களிலும் சாதியினர், முறையே மறையர்/மறையோர் , பறையர்/பறையோன், என்றபெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்

பறையர் குடியிருப்பு

ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதிமங்கலத்து தென்பிடாகை மணற்க்குடியிலிருக்கும் ஊர்ப்பறையன் மண்டை சோமனான ஏழிசைமோகப்படைச்சன் என்பவர் கோவில் ஒன்றிற்க்கு கொடை அளித்ததாக தென் இந்திய கல்வெட்டுக்கள் தொகுதி 7 எண் 794 கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதன் மூலம் பறையர்கள் சதுர்வேதி மங்கலங்களில் குடியிருந்ததை அறிய முடிகின்றது.

பறையர் குடியிருப்பு, சேரி என்றே இன்றும் அழைக்கப்படுகின்றது. பெருளாதாரத்தில் கடுமையாக பின்தங்கிய பறையர்கள் வசிக்கும் சேரிகள் இன்று அவர்களின் பொருளாதார சூழலை பிரதிபலிப்பதால் இன்றை சூழலில் அச்சேரிகள் அழுக்கான என்ற பொருளுடைய Slum என்ற ஆங்கிலச்சொல்லோடு பொருத்திப் பார்க்கப்படுகின்றது. ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகியோரின் தம்பி ரேவதாச வித்தன் வாழ்ந்த ஊரின் பெயர் பாப்பனச் சேரி ஆகும். இம்மூவரும் பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது. சோழர் கால கல்வெட்டானது பறைச்சேரியும் கம்மாணங்சேரியும் ஊரின் நடுபட்ட குளமும் புலத்திற்குளமுங்கரையும் இவ்வூர்திருவடிகள் என்று குறிப்பிடுகின்றது. இதன் மூலம் கம்மாளர்கள் வாழ்ந்த கம்மாளஞ்சேரியும் பறைச்சேரியும் அருகருகே இருந்தன என்பதை அறிந்துகொள்ளலாம். ஆக சேரி என்பது தமிழர்கள் வாழும் பகுதிக்கான ஒரு பெயரேயாகும்.

குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பார்ப்பனச்சேரி என்ற சொல்லாட்சி சங்க காலத்தில் வழக்கில் இருந்துள்ளது. சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பறைச்சேரி மேலைப்பறைச்சேரி  என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் பறையர்களுக்குரிய நிலங்கள் பறைத்துடவை  பள்ளன் விருத்தி  என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு பறையர்களும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.

பறையர் அரசுகள்

வரலாற்றில் சிற்றரசர்களாக பறையர்கள் இருந்துள்ளனர்.

பறையூர் அரசன்

இன்றைய கேரளாவில் உள்ள பறூர் என்றழைக்கப்படும் பறையூரில் வசித்த மக்கள் பறையர்கள் எனவும் அவர்களின் அரசன் தாந்திரீகத்தை நன்குணர்தவர் என்றும், நம்பூதிரிகள் ஒரு போட்டியில் பறையூர் தலைவனை வீழ்த்தி பறையூருக்கு அரசன் ஆனதாக நாட்டார் கதை வழக்கொன்று உள்ளது. சிலப்பதிகாரத்திலும் ‘பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்’ என்ற பாடல் வரி வருகின்றது, அந்த சாக்கையன் கூத்து இன்று வரை கேரளாவில் பறையன் துள்ளல் என்ற பெயரில் ஆடப்பட்டு வருகின்றது.

வில்லிகுலப் பறையர்கள்

இலங்கையில் இருந்த அடங்காப்பதத்தில் நான்கு அரசுகள் இருந்தன அதில் கணுக்கேணியை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் வில்லிகுலப்பறையர்கள் எனவும், இவர்கள் ஆதிக்குடிகள் எனவும், யாருக்கும் அடங்காதவர்களாக இருந்ததனால் அந்த பகுதிக்கு அடங்காப்பதம் என்று பெயர் வந்ததாகவும் வையாப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது. இவர்களை ஒடுக்க திடவீரசிங்கன் என்ற வன்னியர் வந்ததாக இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

நந்தன் என்ற சிற்றரசன்

சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பட்டுச்சுரத்திற்கும் கும்பகோணத்திற்கும் நடுவே இருந்த சோழ மாளிகையைத் தலைமையிடமாகக் கொண்டு நந்தன் என்ற சிற்றரசன் ஆண்டு வந்தான். பிறகு மறவர்களால் நந்தனும் அவனது ஆட்சியும் அழிக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் ஆட்சியில் விளாரியில் இருந்த நந்தன் கோட்டையும் அழிக்கப்பட்டது.

தொழில்

கோலியர் (நெசவு தொழில் )

பறையர்களில் நெசவு தொழில் செய்தவர்கள் கோலியர்கள் ஆவார்கள். இவர்கள் நெசவுப்பறையர் என்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையில் சாலியர் என்று அறியப்படுகின்றனர்

மன்றாடி

பறையர்களைப்பற்றிய நான்கு கல்வெட்டுக்கள் அவர்கள் சூத்திர ராயர்கள் என்று குறிப்பிடுகின்றது. அவற்றில் ஒன்று “மன்றாடி பூசகரி லரைசன் பறையனான பொய்யாத் தமிழ்நம்பி” என்று குறிப்பிடுகின்றது. ஆக இக்கல்வெட்டுக்களின் மூலம் பரையர்கள் பிரம்ம சூத்திரம் உட்பட சூத்திரங்கள் அறிந்த சூத்திர ராயர்கள்என்பதும் மேலும் இவர்கள் பூசகர்களாக இருந்துள்ளனர் என்பதும் தெளிவாகின்றது.

பறையன் அல்லது பொய்யாத் தமிழ்நம்பி என்ற பறையர் பூசகராகப் பணிபுரிந்துள்ளார்.

மருத்துவம்

தென் இந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் கிளைட்டன் என்பவர் பிராமண பெண் ஒருவர் பறையரின் கோவிலுக்கு சென்று தன் பிள்ளையை குணப்படுத்த வேண்டியதாகவும் அங்கு பறையன் மந்திரங்கள் சொல்லியதாகவும் குறிப்பிடுகின்றார்.  அயோத்தி தாச பண்டிதர் போன்றோர் சித்த மருத்துவர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதது. இதன் மூலம் பறையர்கள் மருத்துவம் பார்த்து வந்தனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

காவல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் உள்ள சங்கரநயினார் ஆலய தல வரலாறு காவற்பறையனைப்பற்றி குறிப்பிடுகின்றது. சங்க நயினார் ஆலயம் கட்டுவதற்க்கு முன்பு அங்கு காவற்பறையன் என்பவன் புன்செய் நிலத்தை பாதுகாத்து வந்த வேளையில் ஒரு புற்றை இடிக்கையில் அதில் இருந்து லிங்கமும் பாம்பும் வந்ததாகவும், இச்செய்தியை மணலூரில் ஆட்சி செய்து வந்த உக்கிரப்பாண்டியனிடம் சொல்ல உக்கிரப்பாண்டியன் இந்த ஆலயத்தை கட்டுகின்றார். காவற்பறையனை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தில் காவல் பறையனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

Paraiyar/Maraiyar/Sambavar பறையர்/மறையர்/சாம்பவர்
Kaval Paraiyan – காவல் பறையன் Paraiyar/Maraiyar/Sambavar பறையர்/மறையர்/சாம்பவர்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள காரையூர் திருமாங்கனி ஈஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ஊரைப்பாதுகாக்கும் பணியில் பறையர் ஒருவர் நியமிக்கப்பட்டதை குறிப்பிடுகிறது. ஆதனமழகியான் என்பவருக்கு காரையூர்ப் பறையன் என்றுபட்டம் கட்டி பாதுகாவல் உரிமையை ஊரார் வழங்கியுள்ளனர். இதற்காக அவரிடமிருந்து நூற்றுப் பத்துப் பணம் பெற்றுள்ளனர். இக்காவல்பணிக்காக இடையர்கள் நெய்யும், வலையர் முயலும், பள்ளர் பறையர் கோழியும் அவருக்கு வழங்கவேண்டுமென்று ஊரவர்கள் முடிவுசெய்துள்ளனர். (IPS 843)

பாண்டியமன்னனின் மெய்க்காப்பாளராகப் பறையர் ஒருவர் பணியாற்றியமையை அரையன் அணுக்க கூவன் பறையனேன் என்ற கல்வெட்டு வரிஉணர்த்துகிறது.

சாக்கைப் பறையனார் என்பவர் தனக்கு கீழ் இருந்த சில வீரர்களுக்கு கட்டலை இட்டபதைப்பற்றி செங்கம் நடுகல் ஒன்று குறிப்பிடுகின்றது.  இதன் மூலம் பரையர் ஒருவர் வீரர்களுக்கு கட்டளையிடும் பொறுப்பில் இருந்தமை தெரிகின்றது.

வெள்ளாளன்

“வடபரிசார நாட்டுக் கொற்ற மங்கலத்திலிருக்கும் வெள்ளாழன் பையரில் பறையன் பறையனேன்” என்றும், “வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாழன் பையயரில் சடையன் நேரியான் பறையனேன்”  என்றும், “வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்” என்றும் கோயம்பத்தூர் பகுதியைச்சேர்ந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன, இதன் மூலம் பரையர்கள் வெள்ளாளர்களாகவும், காமிண்டனாகவும்(கவுண்டர்) இருந்துள்ளமையை அறிந் கொள்ளலாம்..

மீன் வியாபாரம்

மடிவலை, வாளை வலை, சாளை வலை, சணவலை, போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு பணம் என்றும், அம்மீனை வாங்கி விற்க்கும் வியாபாரியான சாம்பானுக்கு ஒரு பணம் என்றும் வரி வசூலிக்கப்படுவதாக இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. எனில் 15ஆம் நூற்றாண்டில் கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீனை விற்ப்பனை செய்யும் வியாபாரியாக கன்னியாகுமரி சாம்பவர்கள் இருந்துள்ளனர்.

குதிரை பராமரிப்பு

குதிரைகளுக்கு புல்லிடும் பணியை பறையர்களில் ஒரு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர். குதிரைக்கிப் புல்லிடும் பறையர் என்று சோழர்காலக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் இழிவாகக் கருதப்பட்டதை கல்வெட்டு காப்புரைகள் சில வெளிப்படுத்துகின்றன.

1891 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 342 பறையர் உட்பிரிகள் இருந்தன என்று குறிப்பிடுகின்றது. இதனால் பறையர்கள் வெவ்வேறானதொழில்களில் ஈடுபட்டிருந்தமையும் உழுதொழிலில் ஈடுபட்டவர்கள் மட்டுமே உழப்பறையர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும்புலனாகிறது.

கல்வியறிவு

இம்மக்கள் கல்வியறிவு பெற்றிருந்தமையை சில கல்வெட்டுக்கள் வாயிலாக அறிகிறோம். கொடை வழங்குவதைக் குறிப்பிடும்கல்வெட்டுக்களில் அதை வழங்குவோர் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். கல்வெட்டு வெட்டுவதற்கு முன்அச்செய்தியை ஓர் ஓலையில் எழுதிக்கொள்வர். கையெழுத்திடத் தெரிந்தவர்கள் இவ்ஓலையில் இவை என்னெழுத்து என்று எழுதிக்கையெழுத்திடுவர். கையெழுத்திடத் தெரியாதவர் எழுத்தாணியால் கீறுவர். இது தற்குறி எனப்படும். இவை என்னெழுத்து என்பதற்குப்பதில் இது இன்னார் தற்குறி என்று குறிப்பிடப்படும். அதன்பின்னர் தற்குறி மாட்டறிந்தேன் என்று குறிப்பிட்டு இது என்னெழுத்து என்றுஎழுதி, கையொப்பமிட தெரிந்த வேறொருவர் தன் கையெழுத்தை இடுவார். (ராசகோபாலன் 2001:94-95).

வரி கட்டமுடியாத நிலையில் ஒல்லையூர் மறவர்கள் மதுராந்தகம் என்ற குடிகாடை விற்று வரி செலுத்தியுள்ளனர். இவ்விற்பனைதொடர்பான கல்வெட்டில் அஞ்சாத கண்டப்பறையின் நெடும்பறி கால் என்று ஒரு கால்வாய் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் காலகல்வெட்டொன்றில் (IPS 309) இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டில் பறையர் சிலர் கையொப்பமிட்டுள்ளனர். ஜடாவர்மன்சுந்தரபாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டுக் காலத்திய கல்வெட்டொன்றில், துக்கைப்பட்டன், சொக்கப்பட்டன் என்றசிவபிராமணர்கள் கையெழுத்திடத் தெரியாத நிலையில் தற்குறி இட்டுள்ளனர். ஆனால் இதே கல்வெட்டில் அரசர் மிகா பறையர்,கானாட்டுப்பறையன் என்பவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். (IPS 421)

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள விரையாச்சிலைஎன்ற ஊரில் பனையன்குன்று என்ற நீர்நிலை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்விற்பனை தொடர்பான ஆவணத்தில் பெரியநாட்டுப்பறையன், கானாட்டுப் பறையன், ஐநூற்றுப் பறையன், அரசர் மிகா பறையன், அகலிங்கப் பறையன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.(IPS 535)

மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டி மன்னனின் ஆட்சிக்காலத்தில் நீர்க்குட்டை ஒன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டைஆராய்ந்த ஆர்.திருமலை (1981:28) பெரும்பாலான மறவர்களும் குறுநில மன்னர்களின் வழித்தோன்றல்களும் கூட கல்வியறிவுஇல்லாதவர்களாக இருக்க பறையர்களும் கைவினைஞர்களும் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவதானித்துள்ளார்.

வரி

சோழர் காலத்தில் பளு வரி, பறை வரி என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

பொருளாதார நிலை

நிலங்களுக்கு உரிமையாளராக இருந்ததற்கும் கோவில்களுக்குத் தானம் வழங்கும் அளவுக்கு பணம் படைத்தவராக இருந்தமைக்கும் சிலசான்றுகள் உள்ளன.

கோவில்களுக்கு நிலங்கள் மட்டுமின்றி நந்தா விளக்கெரிக்க கால்நடைகளைத் தானமாகவும் வழங்கியுள்ளனர். திருமானிக்குழிஆளுடையார் கோவில் பெரிய நாச்சியாருக்கு நந்தா விளக்கேற்ற ஊர்ப்பறையன் மண்டை கோமான் என்பவர் பால் எருமை ஒன்றைஅதன் கன்றுடன் குலோத்துங்க சோழக்கோன் என்ற மன்றாடியிடம் வழங்கியதை மூன்றாம் ராஜராஜனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக்கல்வெட்டொன்று (தெ.இ.க. 7,க.எ.794) குறிப்பிடுகிறது.

விக்கிரம சோழ தேவன் காலத்திய (1292–93) கல்வெட்டொன்றில், வெள்ளாட்டி பூசகரான பறையன் ஆளுடை நாச்சி என்பவனும் அவருடைய சிறிய தாயாரும் சேர்ந்து உடுமலைப்பேட்டை வட்டம் சோழமாதேவி நல்லூர் ஊரிலுள்ள குலசேகர சுவாமி கோவில்மண்டபத்திற்கு திருநிலைக்கால் இரண்டும் படியிரண்டும் செய்வித்துள்ளார் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. (தெ.இ.க. 26,க.எ. 253)

சேதுபதி மன்னர் ஆட்சிக்குட்ப்பட்ட பகுதியில் மட்டும் பறையர்கள் அவர்கள் வேளை செய்த நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதிசெப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208) இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242) சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451) சகலமும் ஆண்டு கொள்வது (மேலது, 528)

இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த பரையர்களின் பொருளாதார நிலை மிகவும் பின்தங்கியதாக இருந்துள்ளது என்பதை காண முடிகின்றது

எதிர்க்குரல்

தம்மீது திணிக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் பறையர்கள் கிளர்ந்து எழுந்தமையை கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

திருமயம் வட்டம் தேக்காட்டூர் தருமசமர்த்தினி அம்மன் கோவிலிலுள்ள கல்வெட்டொன்று அவ்வூர் பறையர்கள் களஞ்செதுக்கிவந்ததாகவும், பின்னர் களஞ்செதுக்க மாட்டோம் என்று அறிவித்ததாகவும் குறிப்பிடுகிறது. ஊரவர்கள் பறையர்களின் அறிவிப்பைஏற்றுக்கொண்டதுடன் ஊரிலேயே குடியிருந்து கொண்டு முன்னர் பெற்று வந்த சுதந்திரத்தை அவர்கள் பெற்று வர அனுமதித்ததையும்இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. (IPS 948)

திருமயம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மண்டபத்திலுள்ள கல்வெட்டு, மறவருக்கும் பறையருக்கும் இடையிலானஉடன்படிக்கையைக் குறிப்பிடுகிறது. “நம்மில் வினைவிரோதங்களும் வந்து இரண்டு வகையிலும் அழிவில் இருக்கையிலே” (அழுத்தம்எமது) என்று கல்வெட்டு குறிப்பிடுவதால் பறையர்கள் மறவர்களை எதிர்த்து நின்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. “செம்மயிர்யிட்டும்பாடிக்கொண்டும் பறையர் வரலாம்” என்று இவ்வுடன்படிக்கை குறிப்பிடுவதால் பண்பாட்டு அடையாளம் தொடர்பாக மறவருக்கும்பறையருக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதலாம் (IPS 828).

உதிரப்பட்டி

போர்க்களத்தில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த வீரர்களைப் போற்றும் வகையில் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்படும் நிலம் உதிரப்பட்டிஅல்லது இரத்தக்காணிக்கை எனப்படும். ஊரின் நன்மைக்காக வேறு வகையில் உயிர் துறந்தவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும்நிலமும் உதிரப்பட்டி என்றே பெயர் பெற்றது.

திருமய்யம் வட்டம் தேவமலைக் குடபோகக் கோவிலுக்கு இடதுபுறம் பாறையில் உள்ள கல்வெட்டு மலையாலங்குடி ஊர் பெரியான்பேரையூர் பறையன் மகள் நாடியாருக்கு உதிரப்பட்டியாக மூன்று மா நிலம் வழங்கியதைக் குறிப்பிடுகிறது.

பறையர் உட்பிரிவுகள்

1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “CENSUS OF BRITISH INDIA” என்ற நூலில் “வேட்டுவ பறையன்”, “திகிழு பறையன்”, “மொகச பறையன்”, “குடிமி பறையன்”, “அத்வைத பறையன்” உட்பட “தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய” 83 பரையர் உட்பிரிவுகளை குறிப்பிடுகின்றது.

  1. அச்சக்காசினியூர் பறையன்
  2. அத்வைத பறையன்
  3. அய்யா பறையன்
  4. அழக காட்டு பறையன்
  5. அம்மக்கார பறையன்
  6. அங்கல பறையன்
  7. அங்கையன் பறையன்
  8. பூபு பறையன்
  9. சுண்ணாம்பு பறையன்
  10. தேசாதி பறையன்
  11. இசை பறையன்
  12. ககிமல பறையன்
  13. களத்து பறையன்
  14. கிழகத்து பறையன்
  15. கிழக்கத்தி பறையன்
  16. கீர்த்திர பறையன்
  17. கொடக பறையன்
  18. கெங்க பறையன்
  19. கொடிக்கார பறையன்
  20. கொரச பறையன்
  21. குடிகட்டு பறையன்
  22. குடிமி பறையன்
  23. குளத்தூர் பறையன்
  24. மகு மடி பறையன்
  25. மா பறையன்
  26. மரவேதி பறையன்
  27. மிங்க பறையன்
  28. மொகச பறையன்
  29. முங்கநாட்டு பறையன்
  30. நர்மயக்க பறையன்
  31. நெசவுக்கார பறையன்
  32. பச்சவன் பறையன்
  33. பஞ்சி பறையன்
  34. பரமலை பறையன்
  35. பறையன்
  36. பறையக்காரன்
  37. பறையாண்டி
  38. பசதவை பறையன்
  39. பெருசிக பறையன்
  40. பொய்கார பறையன்
  41. பொறக பறையன்
  42. பொக்கி பறையன் கூலார்
  43. பிரட்டுக்கார பறையன்
  44. ரெகு பறையன்
  45. சம்மல பறையன்
  46. சர்க்கார் பறையன்
  47. செம்மண் பறையன்
  48. சங்கூதி பறையன்
  49. சேரி பறையன்
  50. சிதிகரி பறையன்
  51. சுடு பறையன்
  52. தங்கமன் கோல பறையன்
  53. தங்கம் பறையன்
  54. தங்கினிபத்த பறையன்
  55. தட்டுகட்டு பறையன்
  56. தென்கலார் பறையன்
  57. தெவசி பறையன்
  58. தங்கலால பறையன்
  59. தரமாகிப் பறையன்
  60. தாயம்பட்டு பறையன்
  61. தீயன் பறையன்
  62. தோப்பறையன்
  63. தொப்பக்குளம் பறையன்
  64. தொவந்தி பறையன்
  65. திகிழு பறையன்
  66. உழு பறையன்
  67. வைப்பிலி பறையன்
  68. வலகரதி பறையன்
  69. உறுமிக்கார பறையன்
  70. உருயாதிததம் பறையன்
  71. வலங்கநாட்டு பறையன்
  72. வானு பறையன்
  73. வேட்டுவ பறையன்
  74. விலழ பறையன்
  75. உடும பறையன்

தெலுங்கு பேசிய பரையர்கள்

  1. முகத பறையன்
  2. புள்ளி பறையன்
  3. வடுக பறையன்

மலையாளம் பேசிய பரையர்கள்

  1. ஏட்டு பறையன்
  2. மதராஸி பறையன்
  3. முறம்குத்தி பறையன்
  4. பறையாண்டி பண்டாரம்
  5. வர பறையன்